பழம் பெரும் திரைப்பட நடிகர் சித்தூர் வி .நாகையா அவர்களின் 121 வது பிறந்தநாள்

123
By -
0

பழம் பெரும் திரைப்பட நடிகர் 
சித்தூர் வி .நாகையா அவர்களின் 
121 வது பிறந்தநாள் இன்று .

தமிழ், தெலுங்குத் திரைவானில் சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர் மட்டுமல்லாது பாடகர்,எழுத்தாளர்,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.தமிழில் 1953-இல் என் வீடு என்ற படத்தை இயக்கியுள்ளார். 

தெலுங்கில் 200 படங்களிலும் 
160 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர்களில் முதன்முதலாக 1965-இல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். கன்னடம், மலையாளம், இந்திப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 28.03.1904-அன்று ஆந்திராவில் குப்பம் என்ற ஊரில் தெலுங்குப் பேசும் பிராமண குடும்பத்தில் ராமலிங்க ஷர்மா – வெங்கட லக்ஷ்மாம்பா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இக்குடும்பம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பதிக்குக் குடிபெயர்ந்தது. அக்காலத்திலேயே பட்டப்படிப்பு [பி.ஏ.,] பயின்றவர். அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார். பின்னர் ஆந்திரா பத்திரிகையில் இதழாளராக பணிபுரிந்தார்.

1938-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிருகலெக்ஷ்மி’ தெலுங்குப் படத்தில் கதாநாயகி கண்ணாம்பாவின் சகோதரராக முதன் முதலாக நடித்தார். 

தொடர்ந்து 
’வந்தே மாதரம்’ [1939],
 சுமங்கலி [1940], 
தேவதா [1941], 
தமிழில் அசோக்குமார்’ [1941], 
பக்த போதனா [1942],
 ’சொர்க்க சீமா’ [1945],
 ‘தியாகய்யா’ [1946] 
போன்ற படங்களில் தமிழிலும் தெலுங்கிலும் சம காலத்தில் நடித்தார்.

தனது 69-ஆவது வயதில் 30.12.1973 அன்று காலமானார்.

இந்த பிறந்தநாளில் இந்த மாபெரும் கலைஞனை நினைவு கூறுவோம் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)