வழிகாட்டும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை
கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு(ஆண்/பெண்/மூன்றாம் பாலினத்தவர்) உதவி ஆய்வாளர் தேர்வுக்கான(SI) இலவச பயிற்சி
⚪ கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் போதை போன்ற தவறான பாதைகளுக்கு செல்லாமல் சரியான பாதையை வழிகாட்டும் ஒருபகுதியாக,
⚪ உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சியை வரும் 08-04-2025 அன்று காலை 07 மணிக்கு மாவட்ட ஆயுதப்படையில் வைத்து துவக்கி வைக்கிறார்.
⚪ இந்த பயிற்சியானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் 8:30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறும்.
⚪ இதில் பட்டப்படிப்பை முடித்து வேலைக்கு எதிர் நோக்கும் இளைஞர்கள்(ஆண் /பெண் /இருபாலினத்தவர்) கலந்து கொள்ளலாம். முன் அனுபவம் கொண்ட பயிற்சியாளர்கள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படும்.
🟣 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்த முன்னெடுப்பினை பட்டதாரிஇளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.