ரிஷிவந்தியம் அரசு ஆரம்ப சுகாதார வாளாகத்தில் அடிப்படை வசதிகள். வசந்தம் கார்த்திகேயன் MLA, வுக்கு பாராட்டு.

Theechudar - தீச்சுடர்
By -
0


 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார வாளாகத்தில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் வாளாகம் முழுவதும் முட்புதர்கள் வளர்ந்து, குப்பைகளும் காணப்பட்டு வந்தது



இந்த நிலையில் இதனை கண்ட காங்கிரஸ் கட்சியாலர்கள் சார்பில் பொது மக்களின் நலன் கருதி சுகாதார வாளாகத்தை சீர் செய்யாமல் இருப்பதினால்,சுகாதார வளாத்திற்குள் விசப்பாம்புகளும் வருவதை பார்த்து அங்குள்ள மருத்துவ பணியில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள், மற்றும் நோயாளிகள் என பலர் அச்சத்தில் இருந்து வந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தரப்பில் வாட்சப் இணைய தளம் மற்றும் செய்திகள் மூலம் இதனை சீர் அமைக்கும்வகையில்   இந்த அரசு ஆரம்ப சுகாதார வாளாகத்திற்கு பாதுகாப்பு மதில் சுவர், குடிநீர் வசதி, கழிவரை வசதி, மற்றும் சாலை வசதி, மேலும்  பகல் மற்றும் இரவு நேரம் பாதுகாவளர் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 



இந்த கோரிக்கை முழுவதும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் bsc, MLA,  செய்து தரும்படி கூறியுள்ளார். உடன் சீர் திருத்த பணிகளும் நடத்த ஏற்பாடு செய்த வசந்தம் கார்த்திகேயன்,MLA வுக்கு  ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர்        S.கிருபானந்தம், நகர தலைவர் A. ராதாகிருஷ்ணன், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் MLA வுக்கு நன்றிகளும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


தீச்சுடர் செய்திகள் 

S. சிவலிங்கம்.

ரிஷிவந்தியம்.

Tags:

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)