பாசிச RSS- பாஜக காட்டுமிராண்டி கும்பலின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக..
உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
மற்ற எதிர்கட்சிகள் அனைத்தும் வாய் மூடிக் கிடக்கையில் நாங்கள் மட்டும் தொடர்ச்சியாக EVM ஐ எதிர்த்துப் போராடுவது பாசிச கும்பலுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இவர்களது திட்டத்தை செயல்படுத்துவதில் EVM க்கு எதிரான போராட்டம் பெரும் இடையூறாக உள்ளது.
எனவே இப்போராட்டத்தில் இருந்து எங்களைப் பின்வாங்கச் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் இதில் அவர்களுக்கு தொடர்ந்து தோல்வியே மிஞ்சுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று எப்படியாவது எங்களை அழித்து விட வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் இதனை பல விதங்களில் வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.
பல ஆண்டுகால களப் போராட்ட அனுபவத்தில் இருந்து *#BanEVM #BanRSS என்ற குறிக்கோளை நோக்கிப் போராடுவது தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத் தரும்* என்ற தெளிவான முடிவுக்கு வந்தோம். பாசிச கும்பலின் அச்சுறுத்தலால் எங்களை திசை திருப்ப இயலாது. இலக்கை அடையும் வரை முன்னேறிச் சென்று கொண்டே இருப்போம்.
-நந்தினி ஆனந்தன்