தமிழில் பெயர்ப் பலகை துண்டுப் பிரசுர விநியோகம்
தமிழக அரசின் உத்திரவுப்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படி அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்திலும் தமிழில் பெயர்ப் பலகை வைப்பது கட்டாயம் ஆகும். மே 15-க்கு மேல் அதிகாரிகள் பார்வையிடும்போது சட்டத்திற்கு புறம்பாக பெயர்ப்பலகை வைத்துள்ள கடைகளுக்கு ரூ.2000/- அபராதம் விதிக்கப்படும். ஆகவே வணிகர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சங்கராபுரத்தில் நடைபெற்றது. வணிகர் பேரவை மாவட்டப் பொருளர் இராம.முத்துக்கருக்கன் தலைமையில் சங்கராபுரம் நகரம் முழுவதும் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் கோ.குசேலன் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர திருக்குறள் பேரவைச் செயலர் ஆ.இலட்சுமிபதி, தமிழ்ப்படைப்பாளர் சங்க காப்பாளர் கபாடி வ.விஜயகுமார். துணைச் செயலர் கோ.சக்திவேல், பாத்திரப்பிரிவு தலைவர் அ.சந்திரசேகர் உள்ளிட்டோர் மற்றும் தமிழ் அமைப்பினர் பலர் கலந்து கொண்டார்கள்.
0 Response to "தமிழில் பெயர்ப் பலகை துண்டுப் பிரசுர விநியோகம்"
إرسال تعليق