விவசாய நிலத்தின் தாழ்வாக செல்லும் டெலிபோன் ஒயர்.

Unknown
By -
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சேரந்தாங்கல் குக்கிராமத்தில் வசித்து வருகின்ற( 1)ஜன்னத்பீ (2) யாக்கூப். ஆகியோர்கள் விவசாயம் செய்து வரக்கூடிய
 விலை நிலங்களில் சுமார் ஓராண்டு காலமாக மின்சாரம் செல்லும் கம்பத்தின் வழியில் கட்டப்பட்டுள்ள கருப்புநிற டெலிபோன் ஒயர் அல்லது அரசு மற்றும் தனியார் நிர்வாக ஓயாராக இப்பினும் இந்த ஒயரானது, விவசாய நிலத்தின் கீழே படர்ந்து கிடைக்கிறது. இதனால் அங்கு விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதன் மீது மின்சாரம் சார்ந்து தங்களை தாக்கிவிடும் என்கின்ற அச்சத்தால் பயிர் செய்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். எனவே விவசாயம் செய்ய தடையாகவும், தொடர்ந்து அச்சத்தையுமூட்டும் இந்த ஒயரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் மீது கவனம் செலுத்தி விவசாய மக்களின் நலம் கருதி உடன் நடவடிக்கை எடுத்து சீர் செய்து தருமாறு மேற்கண்ட விவசாய நபர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  கோரிக்கை வைத்துள்ளனர்.

 தீச்சுடர் செய்தியாளர்.
 எஸ். சிவலிங்கம்.
 ரிஷிவந்தியம்.
 89 25 45 86 93.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)