தேடி சென்று கல்வி பணி.
தேடிச் சென்று
கற்றல் பணிகள்
நிகழ்த்தும் அரசுப் பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று. படத்தில் காணப்படும் தாய் தந்தையர்கள் தியாகராசபுரம் செங்கல் சூளையில் பணியாற்றுபவர்கள். பொதுவாகவே இப்பணிகளில் உள்ளவர்கள் நாடோடிகளைப்போல (Nomadic People) வாழ்வதால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதில்லை.
எங்கள் பள்ளி ஆசிரியர்கள் இந்த சூளையில் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்ற தகவல்களை தெரிவித்தனர். அவர்களை அணுகியபோது கடைசி பிள்ளைக்கு இதுவரை பிறப்பு சான்றே பெறப்படவில்லை. அதனால் 7 வயது பெண் குழந்தையை இதுநாள் வரை பள்ளியில் சேர்க்கவில்லை. மற்ற இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கிறார்கள்.
பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு படிப்பு, உணவு, உடைகள், காலணிகள் வழங்கப்பட்டது. இது அக்குழந்தைக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், ஆசிரியர்களும் மற்ற குழந்தைகளும் அவர்களுக்கு இதயப்பூர்வமான அன்பினையும் வரவேற்பினையும் வழங்கியதால் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களின் ஒளி மயமான எதிர்காலத்திற்கு எங்கள் பள்ளி கட்டியம் கூறியது.
இது சம்பவமல்ல. நமது சமூக அவலத்தின் இன்னொரு முகம்.
எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பதை நான் ஏற்கவில்லை. காரணம் கல்விக்கு கடவுள் இருக்கும் இந்நாட்டில்தான் இக்குழந்தைகளும் இருக்கிறார்கள்.
எழுத்தறிவித்தவனை மனிதநேய, குழந்தை நேய பண்பாளன் என்று அழைப்பது தான் சரி.
க. திருப்பதி,
இடதுசாரி சிந்தனையாளர்,
ப.மே.கு.உறுப்பினர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
தியாகராசபுரம்.
0 Response to "தேடி சென்று கல்வி பணி."
إرسال تعليق