பிரபல இந்திய திரைப்பட நடிகர்
பிரபுதேவா அவர்களுக்கு
இன்று பிறந்தநாள்
பிறப்பு: 3 ஏப்ரல் 1973)
அவர்களுக்கு நம் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக
பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
#பிரபுதேவா இந்தியத் திரைப்பட #நடிகர், #நடனஅமைப்பாளர் மற்றும் திரைப்பட #இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். தாயார் பெயர் மகாதேவம்மா. ராஜு சுந்திரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இரு சகோதரன் உண்டு . இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.
மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
திரையுலகில்
பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார்.
இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரது தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன.
இந்த பிறந்த நாளில் இவர் மேலும் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற வாழ்த்துவோம் .