தீவிரமாகும் அண்ணாமலை, எடப்பாடியின் போர்
கொங்குபக்கம் கட்சியை வலிமைப்படுத்த அண்ணாமலையை களமிறக்கிய பாஜகவுக்கு அவரால் தினம்தினம் கட்டப்பஞ்சாயத்துகள் மட்டுமே மிஞ்சுகிறது என்கிறன கட்சி வட்டாரங்கள்.
முக்கிய ’வருவாய்’ நகரங்களான கோவை, திருப்பூரை தன்வசம் கொண்டுவர எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் வெளிப்படையான போட்டி நிலவுகிறது. அண்ணாமலை தான்தான் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என சொல்லி காசு பார்ப்பது எடப்பாடியின் வருமானத்திற்கு ஆப்பு வைக்கிறது.
கூட்டணி ஆரம்பித்த புதிதிலேயே அண்ணாமலை அம்மையாரை ஊழல் குற்றவாளி என்று சொல்ல, கொந்தளித்த ஜெயக்குமார், “அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார்” என்று எதிர்சவால் விட்டதும், அதிமுகவின் ‘புகழ்பெற்ற’ மகளிரணி அண்ணாமலையை ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு அழைத்ததும் வரலாறு.
எடப்பாடி தன் கவுண்டர்சாதி அடையாளத்தை தாண்டி மொத்த அதிமுகவின் தலைமையாக காட்டிக்கொள்ள எவ்வளவோ பிரயத்தனப்படுகிறார். மதுரையில் மாநாடுகூட நடத்தினார். ஆனால் 13 உயிர் பலி, உணவுகளை வீணாக்கியது என அதுவும் கெட்டப்பெயரில்தான் முடிந்தது.
கூட்டணிக்குள்ளும் பிரச்சினை, தலைமை பொறுப்புக்கும் அடிதடி, தொண்டர்களிடமும் கெட்டப்பெயர் என எடப்பாடி அல்லாடுகிறார். அதிமுக சரியான தலைமை இல்லாமல் தள்ளாடுகிறது.
திடீர் தலைவரானது போல் திடீரென்று காணாமலும் போகலாம் என்றெண்ணி அண்ணாமலை தன் சொந்த வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்தி மனைவி மற்றும் மச்சான் மூலம் சொத்து சேர்த்தார்.
தன் கை மீறி போகிறார் அண்ணாமலை என்றெண்ணி அமித்ஷா அமலாக்கத்துறையை அண்ணாமலையின் மச்சானின் செங்கல் சூளைக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணாமலைக்கு பதில் நயினாரை தலைவராக்க தலைமை யோசித்திருப்பது தனக்கு சாதகமாகும் என எடப்பாடி கொஞ்சம் சந்தோசப்பட்டாலும் அதை நிலைக்கவிடாமல் இந்தப்பக்கம் நிர்மலா சீதாராமனை சந்தித்து எடப்பாடிக்கு ஆப்பு ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் செங்கோட்டையன்.
ஏற்கனவே ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு என தொழில் முடங்கி நொந்துபோய் தற்போது மீண்டு வரும் மேற்கு மண்டல தொழிலதிபர்கள் நிம்மதியாக தொழில் நடந்தால் போதும் என யோசிக்கின்றனர்.
இப்படியே போனால் கடந்த தேர்தலை போல வரும் தேர்தலும் திமுகவிற்கு சாதகமாகிவிடும் என மேற்கு மண்டலத்தில் இரண்டு கட்சி நிர்வாகிகளுமே புலம்புகின்றனர்.
إرسال تعليق
0تعليقات