தீரன் சின்னமலை பிறந்த நாள்




ஏப்ரல் 17
தீரன் சின்னமலை.

இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.

இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்த போது, ஒருமுறை இவர் வரிப்பணத்தைக் கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.

வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.

இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

இவரைப் போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரைத் தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை தனது 49வது வயதில் (1805) மறைந்தார்.

0 Response to "தீரன் சின்னமலை பிறந்த நாள் "

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel