தண்ணீர் அருந்துவது எப்படி?



நின்று    கொண்டு   தண்ணீர் அருந்தாதே!!!
  அருந்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தால் கண்டிப்பாக இனி நின்றவாறு தண்ணீர் பருக மாட்டீர்கள். 

  நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது, நீர் நேரடியாக வயிற்றில் விழும். இப்படி வேகமாக விழும் நீரானது உடல் உறுப்புகள் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை பாதிப்படைய செய்கிறது. மேலும் உடலின் சமநிலையை பாதிக்கிறது. இதனால் மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வரக்கூடும். அதுமட்டுமின்றி, செரிமான சிக்கலை ஏற்படுத்தி, உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் ஏற்படவும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது. 

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் இந்த தாக்கங்கள் உடனடியாக நமக்கு தெரியாத காரணத்தால் நாமும் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இப்படி இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் எழுந்தாலும் நின்று கொண்டு அல்லது அண்ணாந்து தண்ணீர் குடிப்பதால் தான் இந்த பிரச்சனைகள் வந்திருக்கலாம் என்பதை கூட சிந்திக்க மாட்டோம்.

ஆயுர்வேத முறைப்படி நீரை வாயில் வைத்து மெல்ல மெல்ல விழுங்க வேண்டும் என்கிறார்கள். அவசர அவசரமாக அருந்துவதையும் தவிர்க்க சொல்கிறார்கள். அண்ணாந்து தண்ணீர் பருகுகையில், நீரானது நுரையீரலுக்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைகளை, எச்சில் பட்டுவிடும் அண்ணாந்து குடி என்பார்கள். 

சிறுவயது முதலே இப்படி பழக்கப்படுத்துவார்கள். இந்த முறை நாகரீகமாக பார்க்கப்பட்டாலும் இது ஆரோக்கியமான முறையாக பார்க்கப்படுவதில்லை.

0 Response to "தண்ணீர் அருந்துவது எப்படி?"

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel