சிவக்கரந்தை பயன்.
சிவகரந்தை...
மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும். இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது.
சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும். நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும்.
சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள், ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.
சிவகரந்தையின் வேரை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். சூரணம் செய்தும் சாப்பிடலாம்.
சிவக்கரந்தை சூரணம் மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது, சிறுநீரக நோய்களை போக்க வல்லது, உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும், நல்ல பசியை தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை.
கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், பேதி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர தலை, மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.
சிவ கரந்தையின் வேருடன் சீரகம் போட்டு கசாயம் செய்து காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும்.
கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும்.
இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும், ஆண்மை பெருகும்.
0 Response to "சிவக்கரந்தை பயன்."
கருத்துரையிடுக