உடலுக்கு தேவையான குரோமியம் உப்பு...
நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் இரத்த நாளங்களிலும் கொழுப்பு தடைகளை ஏற்படுத்தி இதய நோய்களை உண்டாக்குகிறது. இதற்கு உடலில் குரோமியம் உப்பு குறைந்து விட்டதே காரணம்.
குரோமியம் உப்பின் அளவு குறைந்து கொண்டே வருவதற்கு ஒரு காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதே . நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க, கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிட வேண்டும்.
பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் குரோமியம் உப்பு போதுமான அளவு உள்ளது.
இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும்.
இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்போது கேக், ஆட்டுக்கறி மூலம் சேரும் கொழுப்புப் படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்
பல நோய்களுக்கு இந்த உப்பு குறைவே காரணமாக இருப்பதால் எல்லா வயதினரும் பாதாம் பருப்பு, கொண்டைக் கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.