நடிகவேள் எம். ஆர். ராதா (April 14 1907 – September 17, 1979) பிறந்த நாள்.

123
By -
0


நடிகவேள் எம். ஆர். ராதா (April 14 1907 – September 17, 1979) பிறந்த நாள்.


தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகர் அவர்களின் பிறந்ததினம்
மதராஸ் ராஜகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா . சிறு வயதிலேயே வீட்டை விட்டு வந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். இவரது நாடகங்களில் புகழ்பெற்றது ‘இழந்தகாதல்‘ என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் இவரது நடிப்புப் பலராலும் 
பாராட்டப்பட்டது.
இவர் நடித்த முதல் படம் ‘ராஜசேகரன்’ (1937), கடைசிப் படம் ‘பஞ்சாமிர்தம்’
(1979),சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா – நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்! தமிழ் தவிர பிற மொழிப் படங்களில் நடித்திராதவர்.
ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.
பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் தனது மிகுவெற்றி நாடகமான ரத்தக் கண்ணீரின் திரை வெளியீடான ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத் தொடங்கினார்
பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள்
சித்தி, இருவர் உள்ளம் போன்றவை மறக்க முடியாத படங்கள். 
மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் வண்டிக்காரன் மகன், நெஞ்சுக்கு நீதி போன்ற நான்கு படங்களிலும் தசாவதாரம்,வேலும் மயிலும் துணை, பஞ்சாமிர்தம் போன்ற ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்
நடிகவேள் அவர்கள் சிறந்த நடிகர், இலக்கியவாதி ,சிந்தனையாளர் , நாத்திகவாதி , போலித்தனம் இல்லாத மனிதர் , துணிச்சலாக கருத்துக்களை சொல்பவர் , எந்த கட்டுக்குள்ளும் வருத்திக் கொள்ளாமல் தன் விருப்பம் போல் வாழ்ந்தவர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)