கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல்படை ஆட்கள் தேர்வு -2025

Unknown
By -
0


கள்ளக்குறிச்சி மாவட்டத்தி்ல் 2025-ம் ஆண்டுக்கான ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி உயரம் ஆண்கள் 167 சென்டிமீட்டர், பெண்கள் 157 சென்டிமீட்டர். ஏந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாமலும் சாதி, மத, அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராகவும் இருக்கக் கூடாது. விண்ணப்பங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 22.04.2025 இன்று காலை 10.00 மணி முதல் 29.04.2025 மாலை 5 மணிக்குள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படை அலவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். காலி பணியிடங்களின் எண்ணிக்கை 24, இவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும். (நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் ஊதியம் ரூ.2800/- வழங்கப்படும்.) காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

ஊர்க்காவல்படை பணிக்கு உண்டான தகுதிகள் :

1. அரசு ஊழியராக இருப்பின் அவர் தம் துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
2. வயது-20-45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல் அவசியம்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)