கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் வாட்டர தமிழ்ச்சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 135 - வது பிறந்தநாள் விழா ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு தலைவர் த. இராமலிங்கம், பொருளாளர் தொ. விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ச் சங்கச் செயலாளர் வ.இராசகோபால் வரவேற்றார். பாரதிதாசன் திருவுருவப்படத்திற்கு பேராசிரியர் வே.ஸ்ரீதர் மாலை அணிவித்தார்.
தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் தியாகதுருகம் கவி கம்பன் கழகத் தலைவர் மு.பெ. நல்லா பிள்ளை, து. பிரியதர்ஷினி, இரா.இரம்யா மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பாடகர் பாசார். கோ.இராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
إرسال تعليق
0تعليقات