உசிலம்பட்டி காவலர் படுகொலை - கம்பத்தில் குற்றவாளி என்கவுன்ட்டர்
உசிலம்பட்டியில் காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, தேனி கம்பம் பகுதியில் போலீசாரால் என்கவுன்ட்டர்
தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்வண்ணன் போலீசாரால் சுட்டுக்கொலை.
கம்பத்தில் பரபரப்பு, பதுங்கிய குற்றவாளி மீது துப்பாக்கி சூடு
மதுரை உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி பொன்வண்ணன், தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில், காவலர் முத்துக்குமாரை கொலை செய்ததாக பொன்வண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. போலீசாரை தாக்கி தப்பி ஓட்டம் போட்ட பொன்வண்ணனை பிடிக்கும் முயற்சியில் நடந்த மோதலில் என்கவுண்ட்டர் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது