கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் அறிவுரைக்கேர்ப்ப விநியோகத் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு பிரதி மாதம் இராண்டாவது சனிக்கிழமை பொது மக்களின் மின்னணு குடும்ப அட்டை குறை தீர் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1.மணி வரை நடைபெறும் என்ற அரசு அறிக்கையின்படி , வாணாபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை அலுவலர் வழியில் குடிமை பொருள் வட்ட வழங்கள் பிரிவு அலுவலர் S. அண்ணாமலை தலைமையில்.
பொது மக்களின் குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம் 08/03/2025 சனிக்கிழமை அன்று காலை சுமார் 10 மணியளவில் துவங்கப்பட்டது. இதில் 38 மனுக்கள் பெறப்பட்டதை தொடர்ந்து 38மனுக்கள் மீதும் உடனடி தீர்வும் மேற்கொள்ளப்பட்டது. இதில் தொலை பேசி எண் மாற்றம், குடும்ப அட்டையில் உறுப்பினர் நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்தல், மற்றும் அங்கீகார சான்றிதழ், குடும்ப தலைவர் மாற்றம் உறுப்பினர் பெயர் திருத்தம், பிறந்த தேதி,ஆகிய சேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் K. பழனி முன்னிலை வகித்தார். மேலும் இந்த முகாமில் இளநிலை வருவாய் ஆய்வாளர் A. கார்மேகம், மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.