28.03.2025 அன்று ஈரோடு - கரூர் - திருச்சி தடத்தில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் - சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
ரயில் எண் 56809 திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில்: திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 28 மார்ச் 2025 அன்று கரூர் சந்திப்பு வரை மட்டுமே இயங்கும். அன்று கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை இயங்காது.
ரயில் எண் 16845 ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்: ஈரோடு சந்திப்பிலிருந்து பிற்பகல் 14.00 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 28 மார்ச் 2025 அன்று கரூர் சந்திப்பிலிருந்து பிற்பகல் 15.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோடு சந்திப்பிலிருந்து கரூர் சந்திப்பு வரை இயங்காது; கரூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயக்கப்படும்.
ரயில் எண் 16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ்: செங்கோட்டையிலிருந்து காலை 05.10 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 28 மார்ச் 2025 அன்று கரூர் சந்திப்பு வரை மட்டுமே இயங்கும். அன்று கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை இயங்காது.
ரயில் எண் 16843 திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்: திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து பிற்பகல் 13.00 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 28 மார்ச் 2025 அன்று கரூர் சந்திப்பு வரை மட்டுமே இயங்கும். அதே சமயம் புகலூரில் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் கரூரிலிருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக (Unreserved Special Train) இயக்கப்படும்.
கருத்துரையிடுக
0கருத்துகள்