பொதுத் தேர்வு அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்து கண்காணிப்பது சம்பந்தமாக

123
By -
0



 புவனகிரி 
29/03/2025

அனுப்புதல்: அ. குணசேகரன்.எம்.ஏ.பி.எல்.,
தலைவர் ஊழல் எதிர்ப்பு இயக்கம் புவனகிரி -608601. கடலூர் மாவட்டம்.கைப்பேசி எண் 9443563043.

பெறுதல்: 1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழக அரசு, தலைமைச் செயலகம், சென்னை -600 009.

2.மாண்புமிகு  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள், தமிழக அரசு, தலைமைச் செயலகம், சென்னை -600 009.

3.உயர் திரு இயக்குநர் அவர்கள் , பள்ளிக் கல்வித் துறை, சென்னை -600 006.

4.உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
கடலூர்.

5.உயர் திரு முதன்மை கல்வி அதிகாரி அவர்கள்.( பள்ளிக் கல்வி)
கடலூர்.

ஐயா, 

பொருள்: ( பொதுத் தேர்வு அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்து கண்காணிப்பது சம்பந்தமாக)

வணக்கம்,
நமது தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளித்து வருகிறது. பல் வேறு நிதியுதவிகள் அவர்கள் பள்ளிகளில் படிக்கும் போதும், உயர் கல்வி படிக்கும் போதும் செய்து வருகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் தாய் மொழி தமிழில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பிலும் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.இருந்த போதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை விட தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம் அதிகமாக உள்ளதாக கூறப்படுவது வருத்தம் அளிக்கிறது.. கொரோனா காலத்தில் ஆல்பாஸ் போட்டப்பிறகு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில்  நடைபெறும் அனைத்து பொதுத் தேர்வுகளை எழுதுவதற்கு அஞ்சுகின்றனர்கள்.மேலும் சமீப காலமாக மாணவர்கள் இடையே காப்பி அடிக்கும் கலாச்சாரம் பரவிவிட்டது.இதற்கு 💯% தேர்ச்சி காட்ட வேண்டும் என்றும்  அதிக மதிப்பெண் அனைத்து மாணவர்களும் பெற வேண்டும் என்றும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் ஆரம்பித்த சில முறை கேடுகளே காரணம். அதற்கு உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு அந்த பள்ளியிலேயே  விடைகள் சிராஜ் எழுதி கொடுக்கப்பட்ட தை அந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவரின் பெற்றோர் ஒருவரால் அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகார் அனுப்பி வைக்கப் பட்டது. அந்த மாவட்ட ஆட்சியர் அந்த புகார் உண்மை என்பதை திடீரென அந்த பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்த போது ஆய்வு செய்து அது உண்மை என்று கண்டுப்பிடித்தார். அவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த பள்ளியில் தேர்வு நடத்த தடை செய்தார். இன்று தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதால்  அரசுப் பள்ளிகளில் தேர்வு சில மையங்களில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவுவதாக குற்றச்சாட்டுக்கள் வருகிறது. மேலும் இப்போது பல ஊர்களில் அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுத தேவையான மாணவர்கள் எண்ணிக்கை இல்லாமல் போனதால் அவர்கள் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் தேர்வு மையங்கள் சென்று பொதுத் தேர்வுகளை எழுதி வருகின்றார்கள். இந்த தேர்வு மையங்களிலும்  தவறுகள் நடைப்பெறுவதாக கூறப்படுகிறது.ஒவ்வொரு தேர்வு மையங்கள் வெளியே தேர்வு எழுதி விட்டு மாணவர்கள் வீசி செல்லும் பிட் பேப்பர்கள் குப்பையாக தூக்கி எறிந்து விட்டு செல்வதே இந்த மாணவர்கள் எப்படி தேர்வு எழுதி இருப்பார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டும். நேர்மையாக தேர்வு அறையில் கண்காணிக்கும் ஆசிரியர்கள் மனம் வெறுத்து தான் பணி செய்கின்றார்கள். இப்படி பொதுத் தேர்வுகளை தவறான முறையில் எழுதுவதை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இதனால் வருடம் முழுவதும் நன்றாக படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் மனநிலை அதிகளவில் பாதிக்கப்பட்டு அவர்களும் ஒழுங்காக தேர்வு எழுத முடியவில்லை.தேர்வு அறைகளில் நேர்மையாக பணிபுரியும் ஆசிரியர்களுகளுக்கு தேர்வு பணி கூட சரியாக கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.இப்படி தவறான வழிகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களால் உயர் கல்வி நிலையங்களிலும் கல்வி பாதிக்கப்படுகிறது.உயர் கல்வி நிலையங்களில் நேர்மையாக பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களில் குறுக்கு வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்கள் ஆக்கிரமித்து விடுகிறார்கள்.

இப்படி அரசு நடத்தும் பள்ளிப் பொதுத் தேர்வுகள் 10, +1, +2   தேர்வுகளில் நடைபெறும் காப்பி கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றால் ஒவ்வொரு தேர்வு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதுவதை முழுவதும் பதிவு செய்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மேலும் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமாராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகள் வெளியில் தலைமை ஆசிரியர் அறையில் ஒரு நேர்மையான சமூக ஆர்வலர் + ஒரு நேர்மையான கல்வியாளர் மற்றும் ஒரு காவல் துறை அதிகாரியால் அந்த சிசிடிவி காட்சிகள் கண்காணிக்கப்பட வேண்டும்.எப்படி தேர்தல் நடக்கும் போது வாக்குப்பதிவு கண்காணிப்பு செய்யப்படுகிறதோ அப்படி. இல்லை என்றால் வருங்காலங்களில் தகுதி இல்லாத பள்ளி மாணவர்களை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு அது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உயர் கல்வியையே சீரழித்து விடும் அல்லவா.

ஒழுக்கம் இல்லாத மாணவச் சமுதாயம் உருவாகி விடும் அல்லவா? காலத்தின் கட்டாயம் அனைத்து பள்ளி பொதுத் தேர்வு அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட வேண்டியது அவசியம் அல்லவா. 

அதிரடி முதல்வர் உடனடியாக இதனை செய்ய வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது.

இவண்

 அ.குணசேகரன்.தலைவர் ஊழல் எதிர்ப்பு இயக்கம் புவனகிரி.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)