பகுதி நேர ஆசிரியர்கள் அம்மனிடம் கோரிக்கை.
பகுதிநேர ஆசிரியர்கள் அம்மனிடம் கோரிக்கை சீட்டு.
ஆனைமலை,
‘எங்களை பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர் களுக்கு நல்ல புத்தி கொடுத்தாயே' என ஆனைமலை மாசாணியம்மனுக்கு 'வேண்டுதலை சீட்டில் கோரிக்கை எழுதி வைத்துள்ளனர் பகுதிநேர ஆசிரியர்கள்.
தமிழகம் முழுதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும், 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
தி.மு.க., 181 தேர்தல் வாக்குறுதியில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா எனக் கூறியிருந்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக சொன்னதை செய்யாமல் சொல்லாததை செய்கிறோம் என்று பகுதி நேர ஆசிரியர்களை ஏதேனும் சாக்கு போக்கு வைத்து பழிவாங்கும் நோக்கில் பதவியை தவறாக பயன்படுத்தி எந்த ஒரு விசாரணையும் இன்றி நிரந்தர பணிநீக்கம் செய்துவருகிறது. அதாவது ஆட்சிக்கு எதிர்கருத்து கூறும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதனால் மிரண்டு போன பகுதி நேர ஆசிரியர்கள் கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நீதி வேண்டி பக்தர்கள் பிரார்த்தனையை, வேண்டுதல் சீட்டில் எழுதி, அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டால், இரு வாரங்களுக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதையறிந்த பகுதிநேர ஆசிரியர்கள் சிலர், தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டுமென, ஆனைமலை மாசாணியம்மனிடம், தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நல்ல புத்தி, சிந்தனை கொடுத்து, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, 'வேண்டுதல் சீட்டு' எழுதி வைத்து வழிபட்டுள்ளனர்.
தற்போது இது வலைத்தளங்களில் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. ஆட்சியாளர்களைத் தவிர மற்ற அனைத்து ஊடகங்களையும் இது திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
0 Response to "பகுதி நேர ஆசிரியர்கள் அம்மனிடம் கோரிக்கை."
கருத்துரையிடுக