தமிழக முதல்வர் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின விழா சிறப்பு
0
மார்ச் 19, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து அ. பாண்டலம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் உலக மகளிர் தின விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான ந.பாப்பாத்தி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகளை பாராட்டியும், சிறப்புமிக்க அலுவலர்களை பாராட்டியும் ,மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பரிசு வழங்கியும்,ஊர் பொதுவான பெண்களை வாழ்த்தியும் பரிசும் பாராட்டும் நடனமும் கவிதையும் கட்டுரையும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆவின் சேர்மன் சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் நா.ஆறுமுகம் அவர்களும் பல ஊராட்சி மன்ற தலைவர்களும் ,ஒன்றிய கவுன்சிலர்களும்,உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், ஊராட்சி ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.