தூத்துக்குடி - திருச்சி புதிய விமான சேவை 30ம் தேதி தொடக்கம் :
கால அட்டவணை வெளியீடு
தூத்துக்குடி - திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தற்போது, இரு வழித்தடங்களில் நாள்தோறும் 8 விமான சேவைகளும், திருச்சிக்கு 14 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை - தூத்துக்குடி இடையே 12 சேவையாகவும், சென்னை - திருச்சி இடையே 22 சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மார்ச் 30ஆம் தேதிமுதல் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.