உடல் பருமனை குறைக்க அமெரிக்க ஃபார்மா கம்பெனி Eli Lilly இன் Mounjaro ஊசி மருந்து இந்தியாவுக்குள் அறிமுகமாகியுள்ளது.
திடீரென
'பங்கி பாத்தில்' மாடி உடல் பருமனுக்கு எதிராக நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைப்பற்றி பேசியுள்ளார்.
இது தற்செயலான நிகழ்வுகளாகத் தெரியவில்லை.
Mounjaro ஊசி வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளவேண்டும்.
(ரூ 3500/ஊசி).
மாதம் ரூ 15,000 செலவாகும்.
இதுவே அமெரிக்காவில் இந்திய மதிப்பில் மாதம் ரூ 85,000 செலவாகும் (1000 டாலர்).
அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் காப்பீடு அத்தியாவசியமானது.
இன்ஷீரன்ஸ் கம்பெனியிடமிருந்து இந்த தொகையை வசூலித்துவிடுவார்கள்.
இந்தியாவில் இது சாத்தியமில்லை.
அதனால் சடாலென விலையை குறைத்து உள்ளே நுழைகிறார்கள்.
ஒரு மருந்து ஒரு நாட்டில் ரூ 85,000க்கும், அதே மருந்து வேறொரு நாட்டில் ரூ15,000 க்கும் விற்க முடியுமெனில்,
அந்த கார்ப்பரேட் கம்பெனி மீது சந்தேகம் வருகிறது.
அமெரிக்காவில் கொள்ளையடித்தாலும் அதை கார்ப்பரேட் கொள்ளை என்றுதான் சொல்லமுடியும்.
150 கோடி ஜனத்தொகை உள்ள நம் நாட்டில் பீதி ஊட்டி நிறைய விற்கலாம்.
إرسال تعليق
0تعليقات