புராஸ்டேட் வீக்கம்.

புராஸ்டேட் வீக்கம்...

50 +... 50 வயதைக் கடந்த ஆண்களில் பலருக்கு வரக்கூடிய ஒரு பிரச்சினை புராஸ்டேட் வீக்கம். சிறுநீர்க்குழாயைச் சுற்றி விந்தணுக்களைக்கொண்ட ஒரு திரவத்தை உருவாக்கக்கூடியது இந்த புராஸ்டேட் சுரப்பி. இது வயதாகும்போது பெரிதாக வாய்ப்புள்ளது. அப்படி பெரிதாவதாலோ அல்லது வீக்கமடைவதாலோ சிறுநீர்க்குழாயை அழுத்தும்போது வலியுடன் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். 

வயதானவர்களில் சிலர் முக்கல், முனகலுடன் சிறுநீர் கழிப்பது இதனால்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, வலி ஏற்பட்டாலோ சிறுநீர் கழிக்க அதிக நேரம் ஆனாலோ புராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஆனால், பலர் நாட்கள் கடந்த நிலையில்தான் புராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்கிறார்கள். அது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குமுன் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நலமாக இருக்கலாம். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக புராஸ்டேட் வீக்கம் பிரச்சினைக்கு டீ, காபி குடிப்பதை விட்டு விட்டு மல்லி விதையில் டீ தயாரித்து அருந்தலாம். தனியா எனப்படும் கொத்தமல்லி விதை அரை ஸ்பூன் அளவு எடுத்து இளம்வறுப்பாக வறுத்து லேசாக நசுக்கி நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடிக்கலாம். இதேபோல் லவங்கப்பட்டையுடன் கிராம்பு சேர்த்து தட்டிப்போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

ஆளி விதை மிகவும் நல்லது. இது புராஸ்டேட் வீக்கத்தைக் குறைப்பதுடன் புராஸ்டேட் புற்றுநோய் வராமலும் தடுக்கும். ஆளி விதையை ஊற வைத்துச் சாப்பிடலாம் அல்லது சாலட் மாதிரி செய்து சாப்பிடலாம். தயிருடன் ஆளி விதை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இதேபோல் தினமும் தக்காளி ஜூஸ் அல்லது தக்காளி சூப் செய்து குடிக்கலாம். பரங்கிக்காய்... பூசணிக்காயின் விதைகள், தர்பூசணி விதைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டிய நீரை மட்டும் குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் துளசியை நீரில் ஊற வைத்து அதனுடன் தயிர் அல்லது தேன்ச் சேர்த்துச் சாப்பிடலாம்.

எள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் அதை மென்று சாப்பிடலாம். மஞ்சள் வேரை நீர் விட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்துச் சாப்பிடலாம். விளக்கெண்ணெயை லேசாக சூடாக்கி மென்மையாக மசாஜ் செய்வது நல்லது. கேரட், பீட்ரூட் ஜூஸ் நல்லது. இதேபோல் இவற்றில் சூப் செய்தும் குடிக்கலாம். காய்கறி, கீரை சூப் குடிக்கலாம். இதுதவிர ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழங்களின் ஜூஸ் குடிக்கலாம். மல்லிகைப்பூவை இரவு நேரங்களில் விதைப்பகுதியில் வைத்துக் கட்டி வரலாம். மல்லிகைப்பூவை கட்டுவதால் விதைவீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.

நெருஞ்சிமுள், சிறுகண்பீளை மற்றும் சீரகம் தலா 100 கிராம் எடுத்து, அதில் சீரகத்தை இளம்வறுப்பாக வறுத்து மற்ற மூலிகைகளைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவு எடுத்து 150 மில்லி நீர் விட்டு கொதிக்க வைத்து காலை, மாலை என மூன்று மாதம் தொடர்ந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேநேரத்தில் ஆட்டுக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகளை  சாப்பிடக்கூடாது. சர்க்கரை, உப்பு போன்றவற்றை அளவு குறைத்து சேர்த்துக்கொள்ளலாம். செயின் ஸ்மோக்கர் போன்று தொடர்ந்து டீ குடிப்பவர்கள் உடனடியாக அதை நிறுத்துவது நல்லது.

0 Response to "புராஸ்டேட் வீக்கம்."

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel