பா.ம.க ராமதாஸ் அழைப்பு

123
By -
0
திண்டிவனம்
****************

நாளை 17-ஆம் தேதி
பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட
செயலாளர்கள், தலைவர்கள் கலந்தாய்வு!

மருத்துவர் அய்யா  அவர்களின் அறிக்கை

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு வரும் மே 11-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது. இது குறித்து விவாதிப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாளை 17-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு திண்டிவனம் கே.ஆர்.எஸ் அம்மா மஹால் அரங்கத்தில் நடைபெறும்.

பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவனராகிய எனது முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையேற்பார்.

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும்  இணை, சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பா.ம.க, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் மாவட்ட செயலர்கள், தலைவர்கள் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்
பா. கணேசன்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)