லா. கூடலூர் பஞ்சாயத்து கிராம சபைக் கூட்டம். பொதுமக்களுக்கான கோரிக்கைகளை கிராம பதிவேட்டில் தீர்மானம் வைக்கப்பட்டது.



 கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம்   லா. கூடலூர் ஊராட்சியில் 22/03/2025 ல் உலக தண்ணீர் தினம் அன்று நடைபெரவிருந்த கிராம சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டம் 29/03/2025.அன்று லா. கூடலூர் ஊராட்சியில் உள்ள  மகளிர் அலுவலக கட்டிடத்திற்கு முன்பு பொது மக்களின் பார்வையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

 மேலும் இந்த கூட்டத்தில்,குடி தண்ணீர் சேமித்தல், குடி தண்ணீரை சிக்கனமாக கையாலுதல், குடி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தல்,பொது மக்களை நோய் தாக்காமல் இருக்க அணைத்து நீர்தேக்க தொட்டியிலும் நோய் எதிர்ப்பு மருந்தினை அளவிட்டு குடி நீரில் கலக்கும்படியும், வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் எனப் பேசி தீர்மானம் வைக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் கிராமம் தோறும் உள்ள இளம் வழது திருமணம் தடுத்து நிருத்தல், இளம் வழது திருமணத்தால் இளம் வழது பெண்கள் கருவுற்று வருவதை தடுத்துதல், மற்றும் ஒரு குடும்பம் இரண்டு வாரிசுகளுக்குமேல் பெறுவதை தடுத்தல், போன்ற பொது நலக் கோரிக்கைகள் தீர்மானத்தில் வைக்கப்பட்டது.

 இந்த கூட்டத்தில் லா. கூடலூர் பஞ்சாயத்து தலைவர் கேசவன், பஞ்சாயத்து எழுத்தாளர் சண்முகம், பஞ்சாயத்து கிராம செவிலியர்,             லா. கூடலூர் சுகாதார ஊக்குனர்,  கிராம நிர்வாக அலுவலர்,மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆகியோரின் முன்னிலையில், மேலும் லா. கூடலூர் கிராம துப்புரவுப் பணியாளர்கள் , மகளிர் சுழ உதவி குழு பெண்கள்,டேங் ஆப்ரேட்டர்கள்,  மற்றும் தூய்மை காவலர்கள்,பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

   S. சிவலிங்கம்.
தீச்சுடர் 
செய்தியாளர்.
ரிஷிவந்தியம்.
8925458693.

0 Response to "லா. கூடலூர் பஞ்சாயத்து கிராம சபைக் கூட்டம். பொதுமக்களுக்கான கோரிக்கைகளை கிராம பதிவேட்டில் தீர்மானம் வைக்கப்பட்டது."

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel