கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்பை பள்ளிச்சந்தல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்பம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்ன சேலத்தார் PS. ஜெய்கணேஷ் வழிகாட்டுதலின்படி .
ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் S . கிருபானந்தம் தலைமையில் .ரிஷிவந்தியம் கிழக்கு வட்டாரத் தலைவர் G. பால சுந்தரம், மாவட்ட பொதுச் செயலாளர் M. வெங்கடேசன், ரகுபதி, ரிஷிவந்தியம் வடக்கு வட்டாரத்தலைவர் T. அப்பாராசு, ரிஷிவந்தியம் நகரத் தலைவர் A. ராதாகிருஷ்ணன், ஜம்பை பள்ளிச்சந்தல் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகோத்தமன் ஆகியோர்களின் முன்னிலையில் 03/03/2025 அன்று ரிஷிவந்தியம் சட்டமன்றத்திற்குட்பட்ட ஜம்பை பள்ளிச்சந்தல் கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்றிய சமூக விரோதிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.
மீண்டும் அகற்றப்பட்டக் கொடிக்கம்பத்தை அதே இடத்திலோ அல்லது மாற்று இடத்திலோ காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பத்தை அமைத்துத் தர வேண்டும். என்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஜம்பை பள்ளிச்சந்தல் என்கிற கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் V. அபிலாஷ், வட்டாரப் பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, பாக்கம் புதூர் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மிக விரைவில் காங்கிரஸ் கொடி கம்பத்தை அமைத்து தர ஏற்பாடு செய்யாவிட்டால், இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் ஒப்புதலோடும் , கள்ளக்குறிச்சி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவரின் தலைமையில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை எடுத்துரைத்து இப்போராட்டம் நடைபெற்றது.