மேல் மருவத்தூர் பங்காரு சித்தரின் 85 வது பெருமங்கல விழாவை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்.மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் மேல் மருவத்தூர் அம்மாவின் அரவணைப்பு வழியில் அருள் திரு பங்காரு சித்தரின் 85,வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு, 28/03/2025 அன்று ஓம் சக்தி அம்மன் வழிபாட்டு மன்ற கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் k சண்முகம் ஆனைக்கிணங்க, பொது மக்களின் நலன் கருதி காலை 7:00 மணி முதல் மதியம் 2:00மணி வரை சென்னை தேசிய நெடுஞ்சாலை உளுந்தூர்பேட்டையில்,ஜெயராம் தெய்வானை திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.



 இந்த முகாமில் கண் குறைபாடுகலான, கண்ணில் புரை ஏற்படுதல், வயது தொடர்பான கண் நரம்பு சிகிச்சை, மாலை கண், பிறவி கண் கோளாறு,மேலும் பல கண் பரிசோதனைகள் செய்யப்பட்டனர். இதில் பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட கண் நோயாளிகளுக்கு மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவமனையில் தகுதி பெற்ற மருத்துவர்களால் கண் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு ரூபாய் 5000.ம் மதிப்புள்ள லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும் எனவும், மேலும் உணவு, மருந்துகள், 2000ருபாய் மதிப்புள்ள கண் கண்ணாடி,என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும்  இம்முகாமில் அறிவித்தனர். 


இன்னிகழ்சியை ஓம் சக்தி வழிபாட்டு மன்ற கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் V. மணிகண்டன் துவக்கி வைத்தார். மேலும் ஓம் சக்தி மாவட்டத் துணைத் தலைவர்(கிழக்கு ) உளுந்தூர்பேட்டை  A. மகாலிங்கம்.  கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத் தலைவர்( மத்திய பகுதி ) திருக்கோவிலூர் k வெங்கடேசன். ஆகியோர்கள் முன்னிலையில் இம் முகாம் நடைபெற்றது. இதில்  ஓம் சக்தி வழிபாட்டு மன்ற வட்டார, நகர, கிராம, அளவிலான தொண்டர்கள் இணைந்து  ஏராளமான பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி  சிறப்பித்தனர்.


   S. சிவலிங்கம்.
தீச்சுடர் 
செய்தியாளர்.
ரிஷிவந்தியம்.
8925458693.

0 Response to " மேல் மருவத்தூர் பங்காரு சித்தரின் 85 வது பெருமங்கல விழாவை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்.மற்றும் அன்னதானமும் நடைபெற்றது."

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel