ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் ஜம்பை சிவன் கோயில் மகா கும்பா அபிஷேகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்பை கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட சிவன் கோவிலுக்கு மகா கும்பா அபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பா அபிஷேக பெரும் விழா ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்பை கிராமத்தில் நெடுங்காலமாக மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வந்த சிவன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த தலமாகவும் இருந்து வந்தது. மேலும் இந்த சிவன் கோவில் தற்போது ஜம்பை கிராம பொது மக்களால் புதுப்பிக்கப்பட்டு கோபுரம் அமைப்பு வசதி அமைத்து மகா கும்பா அபிஷேகம் 02/02/2025 ஞாயிற்று கிழமை காலை 9:10.மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தி மு க. கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன்.

bsc. MLA. வின் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் bsc MLA வின் வலியுறுத்தலின்படி கும்பா அபிஷேக விழாவிற்கு வருகை புரியும் அணைத்து பொது மக்களின் நலன் கருதி பலத்த பாதுகாப்புஅளிக்கப்பட்டு காவல் துறையினர்களின் உதவியோடு இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த விழாவில் ஜம்பை கிராம பொது மக்கள் மட்டும் அல்லாமல் சுற்று வட்டார பொது மக்கள் அனைவரும் பெருந்திரளாக வரலாறு காணாத அளவிற்கு சிவனின் ஆலய தரிசனம் நாடி கூடி நின்றனர். இந்த சிவாலயத்தில் நடந்த மாபெரும் கும்பா அபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கலந்துகொண்டார்.மேலும் இவ்விழாவிற்கு வருகை புரிந்த MLA விற்கு ஊர் பொது மக்கள் சார்பில் மலர் மாலை அணிவித்து ராஜ கிரீடம் அமைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.மேலும் இந்த ஜம்பை கிராம சிவன் கோவில் கும்பா அபிஷேக விழாவில் பொதுமக்கள் வரலாறு காணாத அளவிற்கு பெருந்திரளாக கூடி நின்று சிவ தரிசனம் பெற்று சென்றனர்.

தீச்சுடர் செய்தியாளர்
S. சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
8925458693.

0 Response to "ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் ஜம்பை சிவன் கோயில் மகா கும்பா அபிஷேகம்."

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel