ஆர்கவாடி கிராமத்தில் குடியிருந்த வீட்டில் திடீர் தீயால் வீட்டு உபயோகப்பொருள் அனைத்தும் எரிந்து கருகியதால் செய்வதரியாமல் கண்ணீர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்கவாடி கிராமத்தில் வசித்து வந்த மாணிக்கம் என்பவரின் மனைவி அன்னம்மாள், வயது சுமார் 63, ஆகும். இவர் தனது கணவர் இறந்து போன பிறகு தனியாக ஒரு கூரை வீட்டில் குடியிருந்துள்ளார், இவர் 03/02/2025.திங்கள் கிழமையன்று கூலி வேலைக்கு சென்று வீடு திருப்பியுள்ளார். அப்போது தனது வீடு தீப்பற்றி எறிந்ததை கண்டதால் கண்ணம்ம்மாளுக்கு செய்வதரியாமல் தவித்துள்ளார், இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆளுக்கொரு குடம், பாத்திரம் கொண்டு தீயை அனைத்துள்ளனர்.

பொது மக்கள் முழற்சித்தும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் மற்றும் காலி சிலிண்டர்,ஆடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கருகியதால் அன்னம்மாள் கண்ணீருடன் மனமுறுகி செய்வதரியாமல் தவித்து நின்றார், இந்த சம்பவம் அறிந்ததும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை MLA வின் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் சேவகன்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் ps. ஜெய் கனேஷ் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் S. கிருபானந்தம், 04/02/2025 அன்று வீடு எறிந்த சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட அண்ணம்மாளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வடக்கு வட்டார தலைவர் T. அப்பாராசு, நகரத்தலைவர் A. ராதாகிருஷ்ணன் ஆகிர்யோர்களின் முன்னிலையில் மனித நேயம் நிமித்தமாக வட்டார தலைவர் கிருபானந்தம் புடவை, போர்வை, மற்றும் உணவு உபகரன பெட்டகம் வழங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு வட்டார பொது செயலாளர் ஆர்கவாடி C. சக்கரவர்த்தி, ஆர்கவாடி கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பிரமணி, மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அண்ணாமலுக்கு அரசு தரப்பில் விசாரணை மேற்கொண்டு வீடு தந்து மறுவாழ்வு அளிக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீச்சுடர் செய்தியாளர்.
S. சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
8925458693

0 Response to "ஆர்கவாடி கிராமத்தில் குடியிருந்த வீட்டில் திடீர் தீயால் வீட்டு உபயோகப்பொருள் அனைத்தும் எரிந்து கருகியதால் செய்வதரியாமல் கண்ணீர்.."

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel