பழமையான கட்டிடத்தில் வைத்து பெண் மருத்துவர் பலாத்காரம்..!! சக மருத்துவரால் நடந்த பயங்கரம் ..!!

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில், சக மருத்துவரால் ஜூனியர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் மருத்துவரை கைது செய்துள்ளனர்.

குவாலியர் நகர காவல் கண்காணிப்பாளர் அசோக் ஜடோன் கூறுகையில், “குவாலியர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த 25 வயது ஜூனியர் பெண் மருத்துவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். விடுமுறை நாள் என்பதால், விடுதியில் அதிக மாணவிகள் இல்லை.

அப்போது, ​​அவருடன் படித்த சக மருத்துவர் ஒருவர், அவரைப் பேச அழைத்துச் சென்றார். இதை நம்பி, அதே வளாகத்தில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு பெண் மருத்துவரை அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Response to "பழமையான கட்டிடத்தில் வைத்து பெண் மருத்துவர் பலாத்காரம்..!! சக மருத்துவரால் நடந்த பயங்கரம் ..!!"

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel