கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனிடம் கோரிக்கை
இது குறித்து கழக வழக்கறிஞரும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறையின் துணை அமைப்பாளருமான லா கூடலூர் எல்ஜி செந்தில் அளித்துள்ள கோரிக்கை முடிவில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு
கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டம் ஆகும்.மக்கள் நலன் காக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்லாவிதமான உள்கட்டமைப்பு வசதிகளும் பல்வேறு வளர்ச்சிகளையும் அடைந்து வருகிறது.
இச்சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு மாணவ மாணவிகள் பலர்சட்டப் படிப்பு படிப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளிலும் அண்டை மாநிலமான ஆந்திரா கர்நாடகா கேரளா புதுடில்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியார் சட்டக் கல்லூரிகளிலும் சட்டப் படிப்பு பயின்று வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயில்வதற்கு அதிகப்படியான பணம் செலவாகிறது.அரசு சட்டக் கல்லூரிகளில் பயில்வதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்படிப்பு படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு குறைந்த அளவேஇடம் கிடைப்பதால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது மேலும் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளே அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழகத்தில் பயின்று வருகின்றனர் இதனால் அரசு சட்டக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பலரால் சட்டக் கல்வி பயில முடியாத நிலை ஏற்படுகிறது தமிழகத்தில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும் 10க்கும் மேற்பட்ட தனியார் சட்டக் கல்லூரிகளும் மட்டுமே இருப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் தொலை தூரங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளில் சென்று படிக்க ஆர்வம் இருந்தும் அவர்களால் பொருளாதார பலம் மிகவும் குறைவு காரணமாக படிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
Link >>> letter
வசதிபடைத்த மாணவ மாணவிகள் மட்டுமே தொலை தூரங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளில் சென்று படிப்பதால் பொருளாதார பலம் குறைந்த மாணவ-மாணவிகள் தங்களது கனவு கல்வியான சட்டக் கல்வியை எட்ட முடியாத நிலை உருவாகி இருக்கிறது.எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டக் கல்வியை மீதான சமூகப்பார்வை பார்வையை அதிகரிக்கும் நோக்கத்தில் மாவட்ட மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் தாயுள்ளம் கொண்ட மனிதநேய பண்பாளர் மாவட்ட கழக செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நீதி கருத்தாளர்களின் மற்றும் மாணவ மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கின்ற அரசு சட்டக் கல்லூரியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கபட்டுள்ளது .
0 Response to "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனிடம் கோரிக்கை"
கருத்துரையிடுக