கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் வட்டம்,ரிஷிவந்தியம் ஒன்றியம், லா. கூடலூர் கிராம பஞ்சாயத்துகுட்பட்ட , லாலாப்பேட்டை , கூடலூர் , சேரந்தாங்கல், மேலத்தேனூர், மற்றும் கீழத்தேனூர் ஆகிய.5,( ஐந்து ) குக்கிராமங்கள் தோறும், அரசு பள்ளிகள் வளாகத்தில் 76, வது குடியரசு தின விழா 26/01/2025 ஞாயிற்று கிழமை அன்று கொடியேற்றி கொண்டாடினர். இந்த குடியரசு தின விழாவில் தேசத் தலைவர்களின் உருவ புகழ்ப் படம் வைத்து மலர் தூவி மலர் மரியாதை செலுத்தி வீர வணக்கம் செய்தனர்.
இதில் கீழத்தேனூர் கிராம அரசு பள்ளியில் துணை தலைவர் துளசி கொடியேற்றி சிறப்பித்தார். பள்ளி ஆண்டு விழாவிற்கு வெற்றிபெற்ற மாணவர் மற்றும் மாணவியற்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மேலும் லா. கூடலூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு 26/01/2025 அன்று கிராம சபாக் கூட்டம் நடத்தபட்டது. இந்த கிராம சபாக் கூட்டம் நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் கேசவன், முன்னாள் தலைவரும், வழக்கறிஞறுமான கொளஞ்சியப்பன், துணை தலைவர், துளசி , கிராம நிர்வாக அலுவலர் வழியில் கிராம நிர்வாக உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர் சண்முகம். சமூக ஆர்வலர் மேலத்தேனுர் அய்யாசாமி, லா.கூடலூர் சீனு, பஞ்சாயத்து சுகாதார ஊக்குனர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், தங்கவேல், ஆகியோர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடக்கோரி கிராம சபா கணக்கு பதிவேட்டில் பதிவேற்றம் செய்து அதனை பொது மக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செயலாளர் சண்முகம் வாசித்தலின்படி தீர்மானங்கள் பதிவு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின்போது லா. கூடலூர் கிராம பஞ்சாயத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், குடி நீர் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள்,மேலும் பகண்டை கூட் ரோடு காவல், குற்ற புலனாய்வு பிரிவு வேல்முருகன்,மற்றும் ஊர் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தீச்சுடர் செய்தியாளர்.
S. சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
8925458693.