TNPSC Syllabus தேர்வர்களின் நலன் மற்றும் அரசு துறைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அரசுப் போட்டித் தேர்வுகளில் குறிப்பாக குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிகளுக்கான பாடத்திட்டம் திருத்தப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேர்வர்களின் நலன் மற்றும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-II (குரூப் 2)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடத் திட்டம். மற்றும் 2A பதவிகள்) திருத்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (குரூப் IV பதவிகள்)க்கான தமிழ் திறன் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் திருத்தப்பட்டுள்ளது.
— TNPSC (@TNPSC_Office) December 13, 2024
பாடத்திட்டத்தை எவ்வாறு பார்ப்பது?
புதிய பாடத்திட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. அவை ஆணையத்தின் இணையதள பக்கங்களான https://tnpsc.gov.in/English/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/tamil/syllabus.html ஆகிய பக்கங்களில் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்களின் நலன் மற்றும் அரசு துறைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இவர்களுக்கான பிரதான தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
தேர்வு முடிவுகள் 33 நாட்களில் வெளியிடப்பட்டன
அதேபோல், குரூப் 4 தேர்வு முடிவுகளும் 2022ஆம் ஆண்டை விட விரைவாக வெளியிடப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாக, குரூப் 1 தேர்வு முடிவுகள் வெறும் 33 நாட்களில் வெளியிடப்பட்டன.
மாபெரும் பாய்ச்சலில் TNPSC
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தேர்வு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
TNPSC Syllabus The TNPSC has announced that this decision has been taken in the interest of the candidates and considering the needs of the government departments.
The TNPSC has announced that the syllabus for government competitive examinations, especially for Group 2 and Group 4 posts, has been revised.
In this regard, a press release issued by TNPSC said, “In the interest of the candidates and considering the needs of the government departments, the syllabus for General Tamil and General English of the Preliminary Examination for Combined Civil Services Examination-II (Group 2 and 2A posts) has been revised.
Similarly, the syllabus for Tamil Aptitude and Assessment Test for Combined Civil Services Examination-IV (Group IV posts) has also been revised.
How to view the syllabus?
The new syllabus has been given in Tamil and English. They have been published separately on the Commission’s website pages https://tnpsc.gov.in/English/syllabus.html and https://tnpsc.gov.in/tamil/syllabus.html, it has been said.
The TNPSC has said that this decision has been taken in the interest of the candidates and considering the needs of government departments.
Earlier, the results of the Group 2 and 2A preliminary examinations were published the day before yesterday. The main examinations for them are scheduled to be held in February.
The results of the examination were published in 33 days
Likewise, the results of the Group 4 examination were also published quickly compared to 2022. On top of all this, the results of the Group 1 examination were published in just 33 days.
TNPSC in a giant leap
It is noteworthy that after the appointment of SK Prabhakar IAS as the TNPSC chairman, the examination work is going on at full speed.
In this situation, the syllabus for competitive exams has now been changed.
கருத்துரையிடுக
0கருத்துகள்