திமுக கழகத்தில் சிறப்பு பணியாற்றி இறந்தவரின் உடலுக்கு நேரில் சென்று ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் MLA. இரங்கல் தெரிவித்து மலர் அஞ்சலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அடுத்த வட தொரச்சலூர் கிராமத்தில் இறந்தவரின் உடலுக்கு நேரில் சென்று ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் MLA. இரங்கல் தெரிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அடுத்த வட தொரச்சலூர் கிராமத்தில் வசித்து வந்த பூமாலையின் குமாரர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் காலமானார்.இவரின் வழது 62. காலம் சென்ற கிருஷ்ணமூர்த்தி திமுக கழகத்தில் சிறப்பு பணியாற்றியவர்.மேலும் வட தொரச்சலூர் கிராமத்தில் உள்ள அய்யனார் ஆலயத்தின் கிளை செயலாளராக ஆன்மீக சிறப்பு பணியாற்றியவர்.
இவரின் உடல் தியாக துருகம் அடுத்த வட தொரச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தகவல் அறிந்த தி மு க கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் bsc, MLA, காலம் சென்ற கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு 25/12/2024 அன்று நேரில் சென்று அங்குள்ள பொது மக்கள் மற்றும் கழக நிர்வாகிகளோடு மாலை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் இறந்தவரின் குடும்பதில் உள்ள அனைவரிடமும் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது, தி மு க, கழகத்தின் நகரம், ஒன்றியம், கிளை கழக, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தீச்சுடர் செய்தியாளர்
S. சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்
8925458693.
0 Response to "திமுக கழகத்தில் சிறப்பு பணியாற்றி இறந்தவரின் உடலுக்கு நேரில் சென்று ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் MLA. இரங்கல் தெரிவித்து மலர் அஞ்சலி"
கருத்துரையிடுக