கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் ஃபென்சல் புயல் காரணத்தால் சனிக்கிழமையன்று நாள் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழைப் பொழிந்தது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாய்வு மண்டலம் புயலாக வலுவடைவதாலும் இந்த புயல் வலுவடையும்போது வட தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையேக் கரையைக் கடக்கும். மேலும் இந்த புயல் வலுவடையும்போது அதன் வேகம் மணிக்கு 70.கிலோ மீட்டர் முதல் 90கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடுவதாகவும்.
இந்த ஃபென்சல் புயல் மறுநாள்பிற்பகல் நேரங்களில் வரலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவித்திருந்தபடி தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 30/11/2024 சனிக்கிழமை அன்று லேசான முதல் மிதமான மழையானது சற்று வேகத்துடன் காணப்பட்டது.
இந்த மழை 01/12/2024 ஞாயிற்று கியமை காலை சற்று வலுவடைந்த நிலையில் புயல் கொண்டுள்ளது. இந்த மழையானது தொடர்ந்து பெய்து வருவதால் ரிஷிவந்தியம் பகுதிக்குட்பட்ட சேரந்தாங்கல் மற்றும் சுற்றுப்புற ஏரிகள் நிரம்பி வருகின்றன. அதுமட்டுமின்றி சேரந்தாங்கல் முதல் லா. கூடலூர் வரை செல்லும் தார் சாலை வழியில் மழை நீர் புரண்டுவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இங்குள்ள சிலர் நீர் வரத்து வாய்க்கால்களை ஆக்கிறமைப்பு செய்து வருவதால் வாய்க்கால் துண்டிக்கப்பட்டு தார் சாலையை கடந்து இந்த மழை நீர் செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சமும் இருந்து வருகிறது. ரிஷிவந்தியம் மற்றும் அப்பகுதி முழுவதும் சற்று வேகமான புயல் காற்றோடும் மழை பெய்தவண்ணமாக உள்ளது.30/11/2024 சனிக்கிழமை அன்று லேசானத் தூரளுடன் காணப்பட்டு வந்த இந்த மழை 01/12/2024 ஞாயிற்று பகல்நேரத்தில் சற்று வேகமான நிலையில் கனமழையாக பெய்து வருகிறது.
இந்த புயல் மழையானது தொடர்ந்து கனமழையாக பெய்து வருகின்ற இந்த மழையால் கிராமங்களில் உள்ள கால் நடை ஜீவன் ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்வதற்கு சிரமத்திற்குண்டான நிலை அதிகமாகவே இருக்கும் சூயல் உருவாகியுள்ளது.மேலும் இந்த புயல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஓடை வழியின்றி விவசாயம் செய்து வரும் நிலப்பறப்பில் நிறைந்து நெற்பயிர்கள் மீது கடந்து செல்வதால் விவசாயிகளுக்கும் நஷ்டம் வரும் சூழ்நிலை காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீச்சுடர் செய்தியாளர்
S சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
8925458693.
கருத்துரையிடுக
0கருத்துகள்