E. V. K. S. இளங்கோவன் .எம் எல் ஏ. எக்ஸ் எம்பி மறைவுக்கு ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்..

Theechudar - தீச்சுடர்
By -
0

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். E. V. K. S. இளங்கோவன் .எம் எல் ஏ. எக்ஸ் எம்பி. 14/ 12/ 2024 அன்று இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் வானாபுரம் வட்டம் பகண்டை கூட் ரோட்டில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான E. V. K. S. இளங்கோவன். 14 /12/ 2024 அன்று இயற்கைஎய்தினார். மேலும் இவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்று ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் இறந்தவரின் உருவப்படம் வைத்து ஆழ்ந்த வருத்தத்துடன் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படியுங்கள் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை – கல்வித்தகுதி தகுதி 12ம் வகுப்பு _விண்ணபிக்கும்முறை

முன்னாள் மாநிலத் தலைவர் E.V. K. S. இளங்கோவன் இயற்கை மறைவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் P. S.ஜெய்கணேஷ் அறிவிப்பின்படி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வானாபுரம் வட்டம் பகண்டை கூட் ரோட்டில் 14 /12 /2024 சனிக்கிழமை அன்று மாலை 3:30 மணி அளவில் ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். கிருபானந்தம் தலைமையில். முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் E. V. K. S. இளங்கோவன் உருவப்படம் வைத்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் ரிசிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி வடக்கு வட்டாரத் தலைவர் T அப்பாராசு, ரிஷிவந்தியம் காங்கிரஸ் நகரத் தலைவர் ஏ இராதாகிருஷ்ணன், ரிஷிவந்தியம் வடக்கு வட்டார செயலாளர் வி.அபிலாஷ் ஆகியோர்கள் முன்நிலையில் மலர் அஞ்சலி செலுத்தி வருத்தம் தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார பொதுச் செயலாளர் c. சக்கரவர்த்தி, மாவட்ட பொது செயலாளர்கள் எம். வேல்முருகன் , ஆர் ரவி, வட்டார துணைத் தலைவர் A. செல்வம், திருவரங்கம் அன்பழகன், மருர் வி. சுந்தர், எம் கோவிந்தசாமி மற்றும் ஏராளமான காங்கிரஸ் பேறியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து மலர்அஞ்சலி செலுத்தினர்.

தீச்சுடர் செய்தியாளர்
எஸ்.சிவலிங்கம்
ரிஷிவந்தியம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)