கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தைச் சேர்ந்த .(24) வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டிக் கொலை . கொலை செய்தக் காதலியின் சகோதரர் மற்றும் நண்பரும் போலீசாரிடம் சிக்கினர்.
தங்கையைக் காதலித்து வந்ததால் நண்பருடன் சேர்ந்து கொடூரக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நெல்லைப் பாளையங்கோட்டை அடுத்த பாளையக்காந்திநகர் பதினெட்டாவது தெருவில் வசிக்கும் சிம் கன் என்கிற புஷ்பராஜ் வயது (25) அங்குள்ள பாளையத் தனியார் வங்கியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். புஷ்பராஜின் தங்கை ஜெனிபர் (23) வயது பொறியியல் பட்டதாரி ஆவார் இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியாரின் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார் .
இதையும் படியுங்கள் : கனமழையால் பாதிக்கப்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு உணவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன்..
இன்ஸ்ட்ராகிராம் காதல் instagram
crime : இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் முனிவாழை (24) வயது கொண்ட விஜயகுமார் என்ற இளம் வாலிபரான இவர், தர்மபுரி மாவட்டம் பார்பி ரெட்டிப் பட்டியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளார் . மேலும் இளம் பெண் ஜெனிஃபர், வாலிபர் விஜயகுமார் ஆகிய இருவரும் தொலைப்பேசி மற்றும் இன்ஸ்ட்ராகிராம் மூலமாக இருவரின் நட்புக் காதலாய் மாறியது தெரியவந்துள்ளது . உருதியாகக் காதலாய் மலர்ந்துவிட்டது, காதல் கொண்ட இவர்கள் இருவரும் வெவ்வேரு சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.

தற்கொலை முயற்ச்சி
இந்த தகவல் அறிந்த ஜெனிபஃரின் சகோதரர் சிம் கன் என்கிற புஷ்பராஜ் நேரடியாக தனது தங்கை ஜெனிஃபரிடம் விஜயகுமார் மீது நீ கொண்டுள்ளக் காதல் வேண்டாம் என்று எச்சரித்தபடி தங்கையின் காதலுக்குமருப்பு தெரிவித்துள்ளார்.தனது சகோதரர் மருப்பு தெரிவித்த நிலையில் ஜெனிஃபர்.தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. , இதனால் வேதனையடைந்த சரோஜாவின் சகோதரர் சிம்கன் புஷ்பராஜ் , கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் காதல் விவகாரங்களைப் பற்றி பேசவேண்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து விஜயகுமார் தன்னுடன் தனது நண்பர் ஒருவருடன் கள்ளக்குறிச்சியிலிருந்து 02/12/2024 அன்று நெல்லைக்கு சென்றுள்ளார்.
மிரட்டல்
இந்த தகவலையறிந்த சிம்கன் புஷ்பராஜ் காந்திநகரைச் சேர்ந்த பெயின்டர் சிவா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் நெல்லையில் ரயில் சந்திப்பு நிலையத்தில் காத்திருந்த தங்கையின் காதலன் விஜயகுமாரை மட்டும் அழைத்து கொண்டு விஜயகுமாரின் நண்பனை நெல்லை ரயில் நிலைய சந்திப்பில் இருக்கும்படி கூறிவிட்டு சென்றதாக தெரியவந்துள்ளது – இதனையடுத்து நெல்லை காந்திநகர் 24வது தெருவில் தங்கியிருக்கும் வீட்டில் மாடியில் வைத்து. ஜெனிஃபர்எனது தங்கை அவளின் மீது நீ காதல் கொண்டுள்ளதை மறந்து விடு என்று விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அறிவாளால் சரமாறியாக வெட்டி படுகொலை
இதற்கு மருப்பு தெரிவித்து தன் காதலைக் கைவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை விஜயகுமாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிம் கன் புஷ்பராஜ் , சிவா இருவரும் சேர்ந்து 02/12/2024 அன்று காலை 8 : 00 மணியளவில் திங்கள் கிழமையன்று விஜயகுமாரை அறிவாளால் சரமாறியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் . தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர், விசாரணையின் அடிப்படையில் கொலை செய்துவிட்டு ஓடிய புஷ்பராஜ் ,சிவா , இருவரும் சிக்கினர் . மேலும் இந்தக் கொலை வழக்கைத் தொடர்ந்து காவல் துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீச்சுடர் செய்தியாளர்
S.சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
8925458693
கருத்துரையிடுக
0கருத்துகள்