அம்பேத்கர் மான்பை பாராளுமன்றத்தில் அவதூறாக பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா வின் உருவ படத்தை செருப்பால் அடித்து தீயிட்டு எரித்து காலால் மிதித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Theechudar - தீச்சுடர்
By -
0

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி வாணாபுரம் பகண்டை கூட் ரோட்டில் இந்திய அரசியல் அமைப்பு சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மான்பை பாராளுமன்றத்தில் அவதூறாக பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்த்து அமித்ஷா வின் உருவ படத்தை செருப்பால் அடித்து தீயிட்டு எரித்து காலால் மிதித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை MLA வின் ஆணைக்கினங்க, கள்ளக்குறிச்சி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் ps ஜெய் கணேஷ் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியம் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் s கிருபானந்தம் தலைமையில் 20/12/2024.வெள்ளிக்கிழமை அன்று வாணாபுரம் பகண்டை கூட் ரோட்டில் பாராளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரின் மான்பை குறைத்து அவதூறாக பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் அமித்ஷா வின் வால் போஸ்ட் உருவப் படத்தை செருப்பால் அடித்து, காளால் மிதித்து, தீயிட்டு எரித்தும், அமித்ஷா வை பதவி விட்டு விலகும்படி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் இந்திய சமூக நீதியை சீர் குலைக்கும் அமித்ஷா ,இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் கால் தொட்டும், பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

இதில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் T. அப்பாராசு, மாவட்ட பொது செயலாளர் p அய்யாசாமி, ரிஷிவந்தியம் நகர தலைவர் A ராதாகிருஷ்ணன், வட்டார அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் S சிவலிங்கம், வடக்கு வட்டார செயலாளர் v அபிலாஷ், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் k மதுரா தேவி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வட்டார பொது செயலாளர் c சக்கரவர்த்தி, lic ஆறுமுகம், வட்டார துணை தலைவர் செல்வம், மாவட்டப் பொது செயலாளர்கள் வேல்முருகன், சுப்பிரமணி, கீழத்தேனூர் கண்ணன் sc த் துறை கோவிந்தன், மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மரூர் புதூர் ராமமூர்த்தி, கடம்பூர் கோவிந்தன், பாலகிருஷ்ணன்,மேற்படி ஏராளமான காங்கிரஸ் பேறியக்க நிர்வாகிகள் அனைவரும் நாகரீகம் அறியாதஅமைச்சர் அமித்ஷாவை கைது செய்து பதவி விலக செய்யும்படி மத்திய அரசிடம் கோறி கடும் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தீச்சுடர் செய்தியாளர்
S.சிவலிங்கம்
ரிஷிவந்தியம்.
8925458693

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)