சோளக்காட்டில் பெண் ஒருவர் மர்மமான முறையில் துப்பட்டா காய்கறிகள் சிதறிக்கிடந்தவாறு இறந்து கிடந்தார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் வடக்கு காட்டுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் செந்தில். இவரது மனைவி சின்னசேலம் அருகே பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இவரது கணவர் செந்தில், நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர், ஆந்திராவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இந்நிலையில் நிர்மலா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று மாலை நாகுகுப்பம் தெற்கு மலைப்பகுதியில் உள்ள பால் சேகரிப்பு நிலையத்தில் பால் ஊற்றிவிட்டு வீடு திரும்பிய அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் நிர்மலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அவரது தம்பி மணிவண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​வீட்டின் அருகே உள்ள சோளத்தோட்டத்தில் பால் ஊற்றி வைத்திருந்த பால் கேன்கள், காய்கறி துப்பட்டாக்கள் சிதறிக் கிடந்தது.

சிறிது தூரத்தில் அக்கா நிர்மலா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி ஆழுத்துள்ளார் . இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோளக்காட்டில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்த விவகாரத்தில், பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Response to "சோளக்காட்டில் பெண் ஒருவர் மர்மமான முறையில் துப்பட்டா காய்கறிகள் சிதறிக்கிடந்தவாறு இறந்து கிடந்தார்!"

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel