பேருந்துகள் செல்லும் தார் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமிப்பு அரசுப் பேருந்து மட்டுமின்றி தனியார் பள்ளிப் பேருந்துக்களும் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திகுட்பட்ட சில கிராமங்களுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பள்ளிப் பேருந்துக்களும் பொது மக்களின் பயணத்திற்கு சென்று வருகின்ற வண்ணம் உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துப் பனிமலையிலிருந்து29,ம் நம்பர் அரசு பெரியார் பேருந்து ஒன்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4:00 மணியளவில் புறப்பட்டு கோமாலூர், M தாங்கல், லாலாப்பேட்டை, கீழ்ப்பாடி, ஆகிய கிராமங்களை மய்யமாகக்கொண்டு மேலும் கீழத்தேனூர், மேலத்தேனூர், மற்றும் சேரந்தாங்கல்,என்கின்ற குக் கிராமங்கள் வரை சென்று வருகின்றது.

 

இந்த கிராமங்களின் தார் சாலையில் அரசுப் பேருந்து மட்டுமின்றி தனியார் பள்ளிப் பேருந்துக்களும், விவசாயம் செய்யும் மக்களின் கரும்பு வெட்டும் காலங்களில் கரும்பு லோடுகள், நெற்பயிறிடும் காலம் முடிந்து அறுவடை செய்து நெல் மற்றும் மற்ற தானிய வகை மூட்டைகளை ஏற்றி செல்லும் காலங்களில் கனரக வாகனம் வந்து செல்கின்றன. இந்நிலையில் தார் சாலைகள் ஆக்கிறமைப்பு செய்து தார் சாலைகள் மறைக்ககாணப்படுவதால் போக்குவரத்து சாலைகளில் மிகவும் மோசமான நெருக்கடிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படும் நிலையும்உள்ளது.

இதையும் படியுங்க : ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுமி இரண்டு நாளும் முயற்சி தோல்வி..

இருந்தும் பேருந்துகள் செல்லும் தார் சாலைகளை இருபுறமும் தனி நபரான சிலர் தன்சுய நலத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து வீடு இருந்தும் மறு வீடு கட்டி அனுபவம் செய்து வருகின்றனர். சிலர் கீழத்தேனூர் தார் சாலை யோரம் அரசு தரிசு தடங்களை அகற்றிவிட்டு வாடகைக்கடைகளை கட்டிவிட்டு மாதம் சுமார் 30000 ரூபாய்வீதம் சில வருடங்கலாக வசூல் செய்து பொது நலமறந்து சுய நலம் அடைந்து வருகின்றனர்.இதன் காரணத்தினால் கீழத்தேனூர் மேலத்தேனூர் மற்றும் சேரந்தாங்கல் வரை பொது மக்களின் நலன் சீர் குலையும் வகையும் உருவாகி வருகின்றது. மேலும் சேரந்தாங்கல் கிராம தார் சாலை வரும் பிற்காலங்களில் காணாமல் போகும் அளவிற்கு மாறிக்கொண்டு வருகின்றது,

 

இதனால் இந்த கிராம பகுதியில் செல்லும் தனியார் பள்ளி மற்றும் அரசு சார்ந்த பேருந்துகள் செல்லும்போது எதிர் நோக்கி வரும் பேருந்துகள் ஒதுங்கி செல்ல தடமின்றி ஏதோ ஒரு பேருந்து வெகு தூரம் பின்னோக்கி சென்று வரும் நிலை உருவாக்கியுள்ளது.மேலும், நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம், மற்றும் கால் நடை பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் பொது மக்கள் அனைவருக்கும் ஒதுங்கி செல்ல தடமில்லாமல் கடும் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.

தீச்சுடர் செய்தியாளர்
S. சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
8925458693

0 Response to "பேருந்துகள் செல்லும் தார் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமிப்பு அரசுப் பேருந்து மட்டுமின்றி தனியார் பள்ளிப் பேருந்துக்களும் பாதிப்பு"

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel