அறுந்த மின் கம்பியில் பேருந்து மோதியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலி

ராணிப்பேட்டை அருகே டீ குடிக்க நின்றபோது தாழ்வாக அறுந்த மின் கம்பியில் பேருந்து மோதியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே முப்பட்டுவெட்டி அருகே டீ குடிக்க சாலையோரம் பஸ் நின்றபோது, ​​சாலையோரம் இருந்த மின் ஒயர் பஸ்சின் மேற்கூரையில் ஏறியதால் பஸ் முழுவதும் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பேருந்தில் இருந்து கீழே இறங்க கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி அகல்யா (20) என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அகல்யா இறப்பதற்குள் கம்பியை தொடாதே… என அலறியபடி கீழே விழுந்தாள். இதையடுத்து அகல்யாவின் உடல் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்வதற்காக பேருந்தில் சென்ற பெண் பக்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

A young woman died tragically when a bus hit a low-lying electric wire while stopping to drink tea near Ranipet.

More than 40 devotees from the Venkatapuram area near Vaniyambadi in Tirupattur district were coming to the Adhiparasakthi temple in Melmaruvathur by bus in the evening. At that time, when the bus stopped by the roadside near the Mupattuvetti area near Arcot in Ranipet district to drink tea, it is said that the electric wire on the roadside hit the roof of the bus, due to which the entire bus was electrocuted.

In this situation, a young woman named Akalya (20) was electrocuted and died tragically when she grabbed the wire to get down from the bus. Akalya fell down screaming, “Don’t touch the wire…” before she died. Following this, Akalya’s body has been taken to the Arcot Government Hospital and kept for autopsy. The Arcot City Police have registered a case and are investigating the incident.

The death of a female devotee due to electrocution while travelling in a bus to visit the Melmaruvathur temple has caused great sadness.

0 Response to "அறுந்த மின் கம்பியில் பேருந்து மோதியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலி"

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel