கனமழையால் பாதிக்கப்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு உணவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன்..

Theechudar - தீச்சுடர்
By -
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் தொகுதியில் ஃபென்சல் புயலின் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரிஷிவந்தியம் சட்டமன்றம் அலுவலகத்தில் தங்கவைத்து உணவு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் Fenjal Cyclone ஃபென்சல் புயல் வலுவானதால் தொடர் மழை.

,கள்ளக்குறிச்சி மாவட்டம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் Bsc, MLA , அறிவுறுத்தலின்படி ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது மேலும் 01/12/24 அன்று பெஞ்சால் புயல் வலுவடைந்து அதிக அளவில் இடைவிடாமல் கனமழைப் பெய்து வந்தது .

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பிற்குண்டாயினர், நிலையறிந்த சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்திகேயன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உபகரணங்கள் வழங்கும்படி அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில் ரிஷிவந்தியம் தொகுதி ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம் வாணாபுரம் ஊராட்சி மதுரா பகண்டை x ரோட்டில் 01/12/2024 ஞாயிற்று கிழமை அன்று முதல் பெஞ்சால் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமின்றி தவித்துக்கொண்டிருந்த 100.கும் மேற்பட்ட பூம் பூம் மாட்டுத்தொழிலாளர் மக்களுக்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன். அலுவலகத்தில் தங்கவைத்து பாதிக்கப்பட்டோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் இயல்பான நிலை திரும்பும் வரை மூன்று வேலை உணவும், போர்வை மற்றும் உபகரணங்கள் வழங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்னிகழ்சியில் ரிஷிவந்தியம் ஒன்றியம் திமுக. கழக வடக்கு ஒன்றிய செயலாளர் துரைமுருகன், மற்றும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும், கழக தெற்கு ஒன்றிய செயலாளருமான பெருமாள் , ஆகியோர் தலைமை வகித்தனர்.

தீச்சுடர் செய்தியாளர்.
S சிவலிங்கம்.
ரிஷிவந்தியம் 8925458693.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)