அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக காவல் ஆனாயார் விளக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது ; மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவல் மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன் சிக்னல் மற்றும் அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்தோம். எப்ஐஆர் வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
எப்ஐஆர் வெளியானது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த FIR இன் நகல்
பதிவு செய்யப்பட்டவை புகார்தாரருக்கு வழங்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியிடுவது குற்றமாகும். அண்ணா பல்கலைக்கழக மாணவர் வழக்கில், ஞானசேகரன் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளார், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை.
புகார் அளிக்கப்பட்ட அன்றே குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் மீது ஏற்கனவே திருட்டு உள்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட நபர் வேறு ஒருவரிடம் பேசியதாக வெளியான தகவல் உண்மையல்ல. மேலும், ஞானசேகரனால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டதாக புகார் வந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 Response to "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக காவல் ஆனாயார் விளக்கம்"
கருத்துரையிடுக