தேனி மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு..

Theechudar - தீச்சுடர்
By -
0

தேனி மாவட்டம் நகராட்சியில் மெய்வழி மக்கள் இயக்கம், மெய்வழி சட்ட மையம் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் ஆணைக்கிணங்கவும் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் ஆலோசனையின்படியும்.

மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் தேனி மாவட்டத்தின் செயலாளர் தினேஷ் அவர்களின் தலைமையிலும் இளைஞர் அணி தலைவர் ஈஸ்வரன் அவர்களின் முன்னிலையிலும் நகராட்சி கட்டணக் கழிப்பிடங்களில் அதிக வசூல் செய்வதை தடுத்து சுற்றுப்புற தூய்மை மற்றும் மாசு ஏற்பட்டு நோய் ஆபாயம் ஏற்படுவதை தடுக்க வேண்டியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அவைத் தலைவர் முத்து அமைப்பாளர் தங்கமாலை அமுதா அருள் புயல்சிவா ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதேபோல் தேனி பழைய பேருந்து நிலையத்தில் மஞ்சள் பை மற்றும் ஆரோ வாட்டர் இயந்திரம் உரிய பராமரிப்பு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விஜயகுமார். தேனி மாவட்டம்

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)