கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அடுத்த வட சிறுவள்ளூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் v.s.மாரியப்பன் நேற்று காலை இறந்து விட்டதை அடுத்து அவரது உடலை அக்கிராமத்தில் உள்ள மணிமுத்தாரு நதியின் கரையோரம் வட சிறுவள்ளூர் கிராம எல்லையில் உள்ள மணி என்பவரது பட்டா நிலத்தில் அடக்கம் செய்து விட்டதாக புகார் ஒன்று அளித்தார்.
இதையும் படியுங்கள் : மகளி உரிமைத் தொகை இனி ரூ. 2100, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
அந்த புகாரின் பேரில் இதுகுறித்து இறந்து போன முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சடலத்தை புதைத்ததாள் இக்கிராமத்தின் மக்களிடையே மிகவும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் மற்றும் வட்டாட்சியர் சசிகலா, சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் அவர்கள் முன்னிலையில் வருவாய்த் துறையினர் அப்பகுதியை நில அளவீடு செய்து வருகின்றனர்
إرسال تعليق
0تعليقات