தாமதமாக சமைத்ததற்காக மகளை அடித்துக் கொன்ற தந்தை - ஆத்திரத்தில் கொடூரமான செயல்

Theechudar - தீச்சுடர்
By -
0

சமைக்க தாமதித்ததற்காக தந்தை ஒருவர் தனது மகளை அடித்துக் கொன்ற சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சவுக் பஜார் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் பர்மர். 40 வயதான இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக முகேஷ் ஆட்டோ ஓட்ட செல்லவில்லை. அவர் வீட்டில் தங்கினார். அவருடன் அவரது 18 வயது மகள் ஹெடாலியும் வீட்டில் இருந்துள்ளார். அவரது தாய் வேலைக்கு செல்வதால், ஹெடாலியை தனது தந்தை முகேஷுக்கு சமைக்கச் சொன்னார்.

இதையும் படியுங்கல் : கங்குவா சாதனையை முறியடித்ததா புஷ்பா 2

ஆனால் ஹெடாலி சமைப்பதை தவிர்த்து வேறு வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், ஹெடாலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது மகள் ஹெடாலியும் பதிலடி கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, சமையல் அறையில் இருந்த குக்கரை எடுத்து ஹெடலியின் தலையில் பலமாக தாக்கினார்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த ஹெடாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)