Allu Arjun arrested அல்லு அர்ஜுன் கைது: தெலுங்கு திரையுலகில் நடந்த பெரும் சம்பவத்தில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. படத்தின் பிரீமியர் காட்சி ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 4ஆம் தேதி இரவு திரையிடப்பட்டது. அந்த முதல் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண நடிகர் அல்லு அர்ஜுனும் வருவதாக தகவல் கிடைத்ததும் அவரை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால், போலீசாரால் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இரவு 9.30 மணியளவில் புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தியேட்டர் கதவுகளை உடைத்து கும்பலாக உள்ளே சென்றதால் பெரும் கூட்டம் அலைமோதியது. இதில் அல்லு அர்ஜுன் ரசிகையான ரேவதியும் தனது மகனுடன் புஷ்பா 2 படத்தை பார்க்க வந்திருந்தார்.
அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி, மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயங்கி விழுந்த மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் மீது சிக்கட்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன் அறிவிப்பு இல்லாமல் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஜூப்லி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த போலீசார் அல்லு அர்ஜுனை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Allu Arjun Arrested: The police have arrested leading actor Allu Arjun in a major incident in the Telugu film industry.
The film Pushpa 2 starring Allu Arjun was released on December 5th. The premiere of the film was screened a day earlier, on the night of December 4th. That premiere was screened at Shanti Cinema in Hyderabad. After receiving information that actor Allu Arjun was also coming to watch the show, a large number of fans gathered there to see him.
This caused a huge crowd in the area. As lakhs of people gathered, even the police could not control the crowd. At 9.30 pm, fans who had bought tickets for the premiere of the film Pushpa broke the doors of the theater and went inside in a mob, causing a huge crowd. In this, Revathi, a fan of Allu Arjun, had also come with her son to watch the film Pushpa 2.
At that time, Revathi, who was caught in the crowd, suffocated and died on the spot. Her son, who fainted, is undergoing intensive treatment. In this situation, the Chikkadpalli police have registered a case against the theater management and actor Allu Arjun in connection with this matter. It was alleged that Allu Arjun came to watch the film without prior notice, which was the reason for the crowd.
Subsequently, Allu Arjun announced that he would give Rs 25 lakhs to the family of the deceased Revathi. In this situation, the Chikkadpalli police have filed a case against Allu Arjun in connection with this incident. He has been arrested. Today, the police who came to his house in Jubilee Hills arrested Allu Arjun and took him for questioning. This matter has created a stir in the Telugu film industry.
கருத்துரையிடுக
0கருத்துகள்