டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்
மது விற்பனை அதிகரிக்கும்
டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளிநாடுகளுக்கு ஏற்ப மாறி வரும் கலாசாரத்தால் மது அருந்துவது ஸ்டைலாகவும், ஃபேஷனாகவும் மாறி வருகிறது. ஒரு காலத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாக கருதப்பட்ட நிலையில், தற்போது மது அருந்துவதை வீடியோ எடுத்து ரீல்களில் பதிவிடுகின்றனர். நள்ளிரவு பார்ட்டிகளில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் மது அருந்துகின்றனர். அதிகரித்து வரும் மது விற்பனையால், நாடு முழுவதும் மது விற்பனையில் பணம் கொட்டுகிறது.
டாஸ்மாக் – கொட்டும் வருமானம்
தமிழகத்தில், 4,829 டாஸ்மாக் கடைகளில், ஒரு நாளைக்கு, 100 முதல், 120 கோடி ரூபாய்க்கு, ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதி வழங்கும் குடோனாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புயல், மழை வந்தாலும், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதில்லை.
டாஸ்மாக் விடுமுறைகள்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மே தினம், சுதந்திர தினம், முகமது நபி பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுதவிர சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட மாவட்டங்களில் சிறப்பு கோவில் நாட்கள் மற்றும் குரு பூஜை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
இந்நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சவேரியார் கோவில் ஆண்டு திருவிழா இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சவேரியார் கோயில் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், சொகுசு விடுதி பார்கள் இன்று (டிசம்பர் 1) முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மூடப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சர்ச் திருவிழா – டாஸ்மாக் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பிறப்பித்த உத்தரவின்படி, நாகர்கோவில் ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் டிசம்பர் 3ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடையை திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறலில்.
0 Response to "டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்"
கருத்துரையிடுக